திருமலை சீனிவாசன்.
மேற்கு மாம்பலம்.
(ஆடுகின்றனடி தில்லையிலே!
பக்தி பாடல் மெட்டு.
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பக்தி பாடல்)
பள்ளி கொண்டனடி
அரங்கத்திலே!
பள்ளி கொண்டனடி
அரங்கத்திலே! அவனை
வணங்க வந்தேனடி நல்
ஏகாதசியிலே!
பள்ளி கொண்டனடி அரங்கத்திலே! அவனை
வணங்க வந்தேனடி நல்
ஏகாதசியிலே!
தும்புரு நாரதரும்
விநதையின் மைந்தனும்
தேவரும் முனிவரும்
வணங்கிடும் அரங்கனை
பள்ளி கொண்டனடி அரங்கத்திலே! அவனை
வணங்க வந்தேன் இத்திருநாளிலே!
வெண்ணெயை அவனே திருடி தின்றான்!
கள்ளழகன் என்ற பட்டம் பெற்றான்!
வெண்ணெயை அவனை திருடி தின்றான்!
கள்ளழகன் என்ற பட்டம் பெற்றான்!
மண்ணை அளந்தவன்
மண் நின்றான்! அது
கோகுலக் கண்ணனின்
லீலை அன்றோ!
கோகுலக்கண்ணனின்
லீலையென்றோ!
பள்ளி கொண்டனடி அரங்கத்திலே!
அவனை வணங்க வந்தேன் நல் ஏகாதசியிலே!
வாழ்வெனும் கடலினை
படைத்து நின்றான்!
அதில் ஒவ்வொரு உயிரையும் நீந்த விட்டான்!
அடித்திடும் அலைகளில்
நீந்தி வந்தேன்!
திருவடி தொழுதேன்!
பயமில்லை!
திருவடி தொழுதேன்!
பயமில்லை!
பள்ளி கொண்டனடி அரங்கத்திலே!
ஆதியும் அந்தமும் இல்லா ஆதி புருஷன்!
அவன் அரவணைத்
துயில்கின்றான் அரங்கத்திலே!
ஆனை காத்திட ஹரியாய் வந்தான்!
அவன் அருளுக்கு என்றுமே அளவில்லை!
அவன் அருளுக்கு என்றுமே அளவில்லை!
பள்ளி கொண்டனடி அரங்கத்திலே!
அவனை வணங்க வந்தேனடி நல் ஏகாதசியிலே!
தும்புரு நாரதரும்
விநதையின் மைந்தனும்
தேவரும் முனிவரும்
வணங்கிடும் அரங்கனை!
பள்ளி கொண்டனடி அரங்கத்திலே!
T. Srinivasan
AG's office ( Retired)
West Mambalam.