அருளாளன் அந்தாதி
திருக்கண்டேன்! கருமேனி கண்டேன்!
திருமார்பில் திகழும் நல் பதக்கம் கண்டேன்!
கருவிழிகளில் கமலமும்
களிசிரிப்பும் கண்டேன்!
திருவடி தாமரைக்கண்டு
என் கர்வம் கலைந்ததுவே!
கலைந்த கேசமும் கைகளில் திருவாழியும் சங்கமும்
முத்தா ஹாரமும் முடிவில்லா ஒர் எழிலும்
ஏழ்பிறப்பு அறுக்கும் ஏகாந்தமும்
என்றும் நம்மை கவர்ந்து இழுக்குமே!
கவர்ந்து இழுக்கும் கன்னங்களும்
நீண்ட நெற்றியில் திகழும் திருநாமமும்
புருவத்தின் கோடுகளும்
நீள்பார்வையும்,
புருஷோத்தாமா! மை சிலிர்க்குதே எம் மனமே!
மனமாரக் கண்டேன் திருப்பவள வாயினையும்
நீள் நாசிக் துவாரமும்
கல் பதித்த கர்ணபத்திரமும்
மருள வைக்கும் உதடுகளும்
அதில் தவழும்
புன்னகையும்
அபயமென அழைக்கும்
திரு கைகளின் எழிலில்
மயங்கியதே மனமே!
மனமே! ஏழு மராமரம் சாய்த்த எம்மான் ராமனாய்!
எய்தான் அம்மான் ஏந்திழைக்காய்!
குன்றமேந்தி குளிர் மழை காத்த பாலகனாய்!
மூன்று உலகம் அளந்த குறளப்பனைக் கண்டு மனம் குளிருதே!
குளிர் நிலவு பார்வையால் ஆநிரை காத்தான்!
தளிர் கரத்தின் சுடராழியால் சுனை முதலை கொன்றான்!
அணி நீல வண்ணத்தில் அணி மருதமரம் சாய்த்தான்!
கள்ள சகடம் உதைத்த திருவடிக்கே பல்லாண்டு பாடுவோமே!
பாடுவோமே பல்லாண்டு பல கோடி அவன் நாமங்கள்!
யானைக்கு அருள் செய்த ஹரியையா?
அண்டத்தை உண்டு நின்ற கண்ணனையா?
மணி வயிற்றில் உரல் கட்டுண்ட தாமோதரனையா?
குட வெண்ணை உண்ட
யசோதை இளஞ்சிங்கனையா?
என்ன சொல்லி பாடுவது எம்
குல தெய்வத்தினை?
குல தெய்வமாய் குழல் ஊதி மனம் குளிர வைத்தாய்!
ததி பாண்டனுக்கு கதி மோட்சமளித்தாய்!
கதியின்றி நிற்கும் எமக்கு பரிதி அளிப்பாயே!
அதி விரைவாய் வருவாய் எம்
ஆதி மூலமே!
ஆதிமூலமாய் நின்று வேதங்களை காத்தாய்!
நீதியும் நேர்மையுமாய் நின்ற பாண்டவர் பக்கமிருந்தாய்!
பீதியிலா பக்த பிரகலாதனுக்கு
நரஹரியாய் ரட்சித்தாய்!
காத்திட வா கண்ணனே! முவ்வுலகமளந்த மூலனே!
மூவ்வுலகமளந்த மூலனை! மாலவனே!
முன்னமே அழைக்கும் எம்மை முடர் கூடம் என நினைத்தானையோ!
கண்ணனே! கரியேனே!
அழகிய சிங்கனே!
கடைக்கண் பார்வையால் எம் பாவங்களை கரைப்பாயே!
கரைந்து உருகும் பக்தர் பிணி அறுப்பாயே!
பாடும் பக்தரை காக்கும்
சிங்கவேள் குன்றின் யோக சிம்மமே!
பாற்கடலில் துயிலும் தூயவனே!
வாயினால் பாடி மனத்தினால் மகிழ்வார்க்கு இனி இடர் இல்லையே!
இல்லை என்பவருக்கும் அருளும்
வேங்கட வரதா!
அறியாப்பிள்ளை
தெளிவின்றி எடுத்துரைத்த
பாக்களில் சொல்பொருள் பிழையிருப்பின்
பொறுத்தருள்க!
கழலடி நிழலில்
சோர்வின்றி சேர எமக்கருள்க!