Thursday, May 13, 2021

சாந்தி நிலையம் படப்பாடல்



சாந்தி நிலையம் படம்.

  இயற்கை என்னுகம்

   இளைய கன்னி

    ஏங்குகிறாள் 

     துணையை எண்ணி 

      பாடல் மெட்டு


பக்தி ஒன்றே 

சிறந்த வழி!


அவன் பாதங்களில்

நாம் சரணாகதி!


பக்தி ஒன்றே 

சிறந்த வழி!


அவன் பாதங்களில்

நாம் சரணாகதி!


பக்தி ஒன்றே 

சிறந்த வழி !


அவன் பாதங்களில் நாம் சரணாகதி!


பொங்கி வரும் பக்திக்கு

எல்லை இல்லையே!


போதுமென்ற மனதிற்க்கு துன்பமில்லையே!


பொங்கி வரும் பக்திக்கு 

எல்லை இல்லையே!


போதுமென்ற மனதிற்க்கு துன்பமில்லையே!


கார்முகில் வண்ணன்

குழல் எடுத்தான்!


கார்முகில் வண்ணன்

குழல் எடுத்தான்!


செவிகளுக்கு

 நல் விருந்தளித்தான்!


பக்தி ஒன்றே 

சிறந்த வழி!


  அவன் பாதங்களில் நாம் சரணாகதி!


வேணு கான ஒலியில்

மான் மயங்குதே!


வேணுகோபாலன் கருணையில் மனம்

உருகுதே!


வேணு கான ஒலியில் 

மான் மயங்குதே!


வேணுகோபாலன் 

கருணையில் மனம்

உருகுதே!


கண்ணன் அருளால்


கண்ணன் அருளால்


கவிதை மலருமே!


மடை திறந்த 

பெரு நதியாகுமே!


பக்தி ஒன்றே 

சிறந்த வழி!


பாதங்களில்

நாம் சரணாகதி!


காளியன் கர்வதனை

அழிந்திடவே!


கண்ணன் அதன் தலையில் நடனமாடவே!


காளியன் கர்வதனை

அழித்திடவே!


கண்ணன் அதன் தலையில் நடனமாடவே!


காண்பது என்றும்

நல் பாக்யமே!


கங்காதரனும் காண

வந்தாரே!


காண்பது என்றும்

நல் பாக்யமே!


கங்காதரனும் காண வந்தாரே!



பக்தி ஒன்றே 

சிறந்த வழி!


அவன் பாதங்களில் நாம் சரணாகதி!



ஆஆஆஆஆஆஆஆ


லலலலலலலலலல



T. Srinivasan

 AG's office (Retired)

West Mambalam.

Wednesday, May 12, 2021

கர்ணன் படம். கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே கண்ட போதே சென்றன ஆங்கே பாடல் மெட்டு

பிருந்தாவனமே!


கோலாகலமே!


கண்ணனைக் கண்டதும் மயங்குது மனமே!



குழலின் கானம் செவிக்கு விருந்தே!


ஊதும் கண்ணன் ஊனில் கலந்தே !


ஆஆஆஆஆஆஆஆ


பிருந்தாவனமே!


கோலாகலமே!


கண்ணனைக் கண்டதும் மயங்குது மனமே!


குன்றமேந்திய கரமொன்று

மழைக் காத்தருளும்!


மழைக் காத்தருளும்!



ஆஆஆஆஆஆஆஆ


குழல் ஊதும் கரமொன்று

கனிவாய் கண்டருளும்!

கனிவாய் கண்டருளும்!


இசைக் கேட்டு கவரிமான்கள்


தன் நிலைதனை மறக்கும்!


தன் நிலைதனை

மறக்கும்!


 இயற்கையே இன்னிசைக்

கேட்டு மகிழும்!


 ஆஆஆஆஆஆஆஆ


பிருந்தாவனமே 

கோலாகலமே!


கண்ணனைக் கண்டதும் மயங்குது மனமே!


குழலின் கானம் செவிக்கு விருந்தே!


ஊதும் கண்ணன் ஊனில் கலந்தே!

ஆஆஆஆஆ


பிருந்தாவனமே!

கோலாகலமே!


கண்ணைக்கண்டதும்

மயங்குவது மனமே!


வரமென்ன! அருளென்ன

கருணையென்ன

தெரியேன் !


கருணையென்ன

தெரியேன்!


ஈடில்லா அவன் லீலையில் எதை 

புகழ்ந்துரைப்பேன்!


ஈடில்லா அவன் லீலையில் எதை

புகழ்ந்துரைப்பேன்!


கண்ணழகில் கோபிகையின்

மனத்தைக் 

அவன் கவர்ந்தான்!


துயிலின்றி அனலிட்ட

புழுவாகத் துடித்தாள்!


ஆஆஆஆஆஆஆஆஆ


பிருந்தாவனமே!

கோலாகலமே!


கண்ணனைக் கண்டதும் மயங்குது மனமே!


குழலின் கானம் செவிக்கு விருந்தே!


ஊதும் கண்ணன் ஊனில் கலந்தே!


ஆஆஆஆஆஆஆஆ


பிருந்தாவனமே!

கோலாகலமே!


கண்ணைக் கண்டதும் மயங்குது மனமே!


பிருந்தாவனமே!

கோலாகலமே!

நானும் ஒரு பெண் படம். கண்ணா கருமை நிறக் கண்ணா பாடல் மெட்டு



நானும் ஒரு பெண் படம். கண்ணா கருமை நிறக் கண்ணா பாடல் மெட்டு


ரெங்கா!


காவேரி கரை ரெங்கா!

உன்னை உணராதவர் 

இல்லையே!


உள்ளம் உருகி நின்றேன்!


கண்டு  களித்திருந்தேன் !


எங்கு கண்டாலும் 

உன் தன் வடிவே!


ரெங்கா!


காவேரி கரை ரெங்கா!

உன்னை உணராதவர்

இல்லையே!


உள்ளம் உருகி நின்றேன்!

கண்டு களித்திருந்தேன்!


எங்கு கண்டாலும் உன்தன் வடிவே!


ரெங்கா !

காவேரி கரை ரெங்கா!

உன்னை உணராதவர் இங்கில்லையே!


பாற்கடலில் பள்ளி கொண்டவன் நீயே ரெங்கா!


பார்மகளை காத்து   

பாரம்தனைக் குறைத்தாய்

ரெங்கா!


பாற்கடலில்  பள்ளி 

கொண்டவன் நீயே ரெங்கா!


பாற்மகளை காத்து 

பாரம்தனை குறைத்தாய் ரெங்கா!



குறைவான நேரம் தான்

காட்சி தந்தாய்! ரெங்கா



எங்கள் குலம் விளங்க 

குறை தீர்க்க வருவாய் ரெங்கா!


குறைவான நேரம் தான்

காட்சி தந்தாய்

ரெங்கா!


எங்கள் குலம் விளங்க

குறை தீர்க்க வருவாய்

ரெங்கா!



ரெங்கா!

காவேரி கரை ரெங்கா!

உன்னை உணராதவர் இங்கில்லையே!


உள்ளம் உருகி நின்றேன்!

கண்டு களித்திருந்தேன்!


எங்கு கண்டாலும் உன்தன் வடிவே!


கோதையின் பூமாலையை சூடிக் கொண்டாய்!

ரெங்கா!


கீதை வழி சென்றிட 

உபதேசித்தாய் !

ரெங்கா!



கோதையின் பூமாலையை சூடிக் கொண்டாய்!

ரெங்கா!



கீதை வழி சென்றிட

உபதேசித்தாய்!

ரெங்கா!


அமலனாதிபிரான் கேட்டு மகிழ்ந்தாய்!

ரெங்கா!


எம் இருள் நீக்கி

அமைதியடைய

அருள்வாய் !

ரெங்கா!


அமலனாதிபிரான் 

கேட்டு மகிழ்ந்தாய்!

ரெங்கா!


எம் இருள் நீக்கி

அமைதியடைய

அருள்வாய் !

ரெங்கா!


ரெங்கா!


காவேரி கரை ரெங்கா

உன்னை உணராதவர் இங்கில்லையே!


உள்ளம் உருகி நின்றேன்!


கண்டு களித்திருந்தேன்!


எங்கு கண்டாலும் உன்தன் வடிவே!


ரெங்கா !

காவேரி கரை ரெங்கா!


உன்னை உணராதவர் இங்கில்லையே!


உள்ளம் உருகி நின்றேன்!


கண்டு களித்திருந்தேன்!


எங்கு கண்டாலும் உன்தன் வடிவே!


ரெங்கா !

காவேரி கரை ரெங்கா

உன்னை உணராதவர் இங்கில்லையே!

Raamar Paadal


ராகம்: பேஹாக்


தசரதராமனே! 

நமோ நமோ!


தகமுகனை அழித்தவா

நமோ நமோ!


தசரதராமனே 

நமோ நமோ!


தசமுகனை அழித்தவா

நமோ நமோ!


தசரத ராமனே 

நமோ நமோ!


கல்லான அகலிகை

சாபத்தை தீர்த்தவன்!


கல்லான அகலிகை

சாபத்தை தீர்த்தவன்!


கனியுண்ட சபரிக்கு

கனிந்தருள் புரிந்தவன்!


கனியுண்ட சபரிக்கு

கனிந்தருள் புரிந்தவன்!


 தசரத ராமனே!

நமோ நமோ!


தசமுகனை அழித்தவா

நமோ நமோ!


உன் திருநாமத்தை

உரைத்திட்ட பேருக்கு


உன் திருநாமத்தை 

உரைத்திட்ட பேருக்கு


பழவினை 

மேல் வினை

பறந்தோடி போகுமே!


பழவினை 

மேல் வினை

பறந்தோடி போகுமே!


தசரத ராமனே!

 நமோ நமோ!


தசமுகனை அழித்தவா!

நமோ நமோ!


கலிதோஷம் நீங்கிடவே

காகுத்தன் நாமம் பாடு!


கலிதோஷம் நீங்கிடவே

காகுத்தன் நாமம் பாடு!


தடையில்லா வழியாகுமே!


கடைதோறுவோம்

வைகுண்டத்திற்கே!


தடையில்லா வழியாகுமே!


கடைதோறுவோம்

வைகுண்டத்திற்கே!


தசரத ராமனே!

நமோ நமோ!


தசமுகனை அழித்தவா!

நமோ நமோ!


தசரத ராமனே!

நமோ நமோ!


நமோ நமோ!

நமோ நமோ!


T. Srinivasan

AG's office (Retired)

West Mambalam.

சின்னஞ் சிறு கிளியே! கண்ணம்மா ! பாடல் மெட்டு



கரு நீலக் குயிலே!

கண்ணப்பா!

கருணையின் அருள் வடிவே!


கரு நீலக் குயிலே!

கண்ணப்பா!


கருணையின் அருள் வடிவே!


எந்தன் வினைக் களைந்தே


வாழ்வில் ஒளி ஏற்றி 

மிளிர வைத்தாய்!


எந்தன் வினைக் களைந்தே

வாழ்வில் ஒளி ஏற்றி

மிளிர வைத்தாய்!


கரு நீலக் குயிலே!

கண்ணப்பா!

கருணையின் அருள் வடிவே!


ஊதும் பொழுதினிலே!

கண்ணப்பா!

குழல் ஊதும் பொழுதினிலே கண்ணப்பா!

ஊனே உருகுதப்பா!

ஊதும் பொழுதினிலே கண்ணப்பா

என் ஊனே உருகுதப்பா!

நாடி நரம்பெல்லாம் கண்ணப்பா!

உன் திருநாமமே

ஜொலிக்குதப்பா!


கோகுலம் கன்னியரெல்லாம்

கோபாலா! 

உந்தன் லீலையில் மயங்கினரே!


கோகுலம் கன்னியரெல்லாம்

கோபாலா!

உந்தன் லீலையில் மயங்கினரே!


குதுகுலத்திற்கு ஒரு 

எல்லையில்லையே!

யதுகுலம் ஏற்றம் அடைந்ததப்பா!


குதுகலத்திற்கு ஒரு எல்லையில்லையே!

யதுகுலம் ஏற்றம் அடைந்ததப்பா!


கழலடியில் கிடந்ததனால் 

களைப்பே தெரியவில்லை!

கழலடியில் கிடந்ததனால்

களைப்பே தெரியவில்லை!


உன் அருள் பெற்றிடினோ

கண்ணப்பா!

என்றும் 

நிறைவுதானப்பா!


உன் அருள் பெற்றினிடினோ

கண்ணப்பா!

என்றும் நிறைவுதானப்பா!


உன் கண்கள் குளமானால்

கண்ணப்பா!

என்  மனம் சிதறுதப்பா!

உன் கண்கள் குளமானால்

என் மனம் சிதறுதப்பா!


என் பாட்டின் ஸ்வரமன்றோ!

கண்ணப்பா!

என் ஜீவன் உனக்கன்றோ!


என் பாட்டின் ஸ்வரமன்றோ

கண்ணப்பா!

என் ஜீவன் உனக்கன்றோ!

என் ஜீவன் உனக்கன்றோ!


T. Srinivasan

நம் அண்ணா சம்பத்துக்கு ஒரு மடல்

திருமலையில் ஒரு 

தெய்வம்!

எம் குடும்பத்திற்கு

திருமலையே தெய்வம்!


ஏழு திருமாளிகை திருமலை தாத்ததின்

இரண்டாம் வாரிசே!


நற்குணத்திற்கும்

நல் பாசத்திற்கும்

உனக்கு என்றும்

 முதல் பரிசே!


கடமையும் கண்ணியமும்

சகல சம்பத்துகளாய் திகழ்ந்தவனே!


உள்ளத்தில் உயர் சிந்தனை!


சமத்துவம் என்றும் உனது சித்தம்!


நல் குணமே  உன் 

நாடி துடிப்பு!


நீ பட்ட வேதனை பெரிது!


வெளி காட்டா உன் குணமே

அதினினும் பெரிது!


அதுவே உன் உயிர் நாடி!


அதற்கு தலை வணங்குகிறேன் கோடானுகோடி!


உரத்த குரலில் உண்மையை உரைக்கும் உத்தமனே!


மத்திய அரசு ஊழியர்களின்

மனதில் நிலை கொள் 

மாவீரனே!


அவர்களின் அன்பு

ரகுநாதனே!


பலருக்கும் நீ குருநாதனே!


 ஊழியர்களின்

வாழ்வில் ஒளி ஏற்றிய

ஒளி விளக்கே!


ஊழியர் சங்கத்தின்

கலங்காத மனம் கொண்ட

கலங்கரை விளக்கமே!


சக ஊழியர்களின்

கஷ்டத்தில் கை கொடுத்து கரை சேர்த்து

கண் அயராது பாடு பட்ட கனவானே!

என் அண்ணனே!


ஏழைக்கு இரக்கம் கொண்டு உதவி செய்பவனே!


அவர் துன்பங்களை துடைத்த தூயவனே!


அதனால் கருணைக்கு 

நீ ஒருவனே!

காருண்யத்திற்கும் நீ

ஒருவனே!


குழந்தைகளை நேசித்து

 விளையாடி 

குழந்தை போல் உள்ளம் கொண்டவனே!


தள்ளாத வயதிலும்

தனக்கென்று

 தனி வழியில்

நின்ற குணசீலனே!


நியாயம் நேர்மை வாக்குமாறாகப் பண்பாளனே!


வெள்ளை வேட்டி சட்டை அணிந்து

கள்ளமில்லா 

கறை படியாத

வெள்ளை மனிதனே!


கண் கலங்கும் நேரங்களில்

கலங்கா மனம் கொண்டு

கண் எதிரில் வாழ்ந்து

சென்ற அன்பு அண்ணனே!


என்றும் ஊரில் உனக்கு

பெயருண்டு!

உறவு உண்டு !

நல் உள்ளங்கள் உண்டு!


காலமகள் கரம் பிடித்ததால் 

திருமகள் மைதிலியின்

கரம் விட்டு

ரம்யமான மகள்

ரவி ராம்பிரபு என்ற குழந்தைகளை மறந்தனையோ!


அண்ணனே!

கடைத்தம்பியின்

வணக்கம் மட்டுமல்ல!

என் விண்ணப்பம் ஒன்று உண்டு!


சம்பத் அண்ணனே!


என்றும் எமக்கு அன்பு 

காட்டும் அண்ணனாய்

ஆறதலளித்திடும் அன்பாய் வர வேண்டும்!


அண்ணனே!

நீ பாசத்தின் பிறப்பிடம்!


பண்பில் குறையில்லா

நிறைகுடம்!


தர்க்த்தில் நீ முதலிடம்!


என் மனதில் நின்றாய்

என்றும் முதலிடம்!


அண்ணனே! வருக!


அந்த ரகுநாதனுக்கு ஒரு வில் பவர்!


இந்த ரகுநாதனுக்கு சொல்லும் செயலும் தான் வில் பவர்!


உன்  வில் பவரால் வைகுண்ட வசிக்க சென்றாயோ!


எம் சார்பாக வாதிட்டு 

எமக்கும் முன் பதிவிட

 அங்கு சென்றாயோ பாசத்தினால்!


கடைசி தம்பியின்

கண்ணீர் அஞ்சலி!


கரம் கூவித்து வணங்குகிறேன்

நன்றிப் பெருக்குடன்.

லவ குசா படம்.ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே! உங்கள் செவி குளிரப் பாடுகிறோம் கேளுங்கள் இதையே! பாடல் மெட்டு


 லவ குசா படம்.ஜகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே! உங்கள் செவி குளிரப் பாடுகிறோம் கேளுங்கள் இதையே!

பாடல் மெட்டு


உலகம் போற்றும் 

புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன்

மகிழுங்கள் இனிதே!


உலகம் போற்றும்

புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன்

மகிழுங்கள் இனிதே!


பேரின்ப வாழ்வெல்லாம்

பெற்றிடலாமே!


இந்த கதைக கேட்கும்

எல்லோருமே!


சிலிர்க்குது உடலெல்லாம் 

பாடிடும் போதிலே


அருளே அளித்திடும்

நல் காவியமாகும்!


உலகம் போற்றும் 

புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன்

மகிழுங்கள் இனிதே!


அயோத்தி அரசன் 

தசரதனின் அருள் வேள்வியால்


அவன் மனைவி கெளசல்யா கைகேயி

சுமித்ரை!


கண்ணியமாய் ஈன்றனர்

 ராம இலட்சுமணர்!

அன்புள்ள பரதன் சத்ருகன் நால்வர்!


ஆ..ஆ..ஆ..ஆ..ஆ


சான்றோர் வாழ்த்தவே

நால்வரும் அரும் கலை


நான்மறை பயில மன்னன்

அனுமதித்தானே!


காட்டில் கெளசிகன் 

யாகத்தை காக்கவே!


கனிவுள்ள இராம லட்சுமணனை அனுப்பினானே!


காட்டில் கெளசிகன் யாகத்தை காக்கவே


கனிவுள்ள இராம லட்சுமணனை அனுப்பினானே!


தாடகை சுபாஹூவை

கதையினை முடிக்கவே


தவமுனி வேள்வி காத்து ஆசி பெற்றனரே!


தாடகை சுபாஹூவை

கதையினை முடிக்கவே


தவமுனி வேள்வி காத்து ஆசி பெற்றனரே!


கல்லான அகலிகை

சாபம் தீர்த்த பின்


கல்லான அகலிகை 

சாபம் தீர்த்த பின்


புகழ்மிகு  மிதிலை நோக்கி நடந்து சென்றனரே!


வழிதனில் போகும் போதிலே இராமன்



சீதையை மாட மாளிகையிலே 

கண்டான்!


வழிதனில் போகும் போதிலே இராமன்


சீதை மாட மாளிகையிலே 

கண்டான்!


அன்பு கொள் இருவரும்

கண்ணால் பேசினர்!


அன்பு கொள் இருவரும்

கண்ணால் பேசினர்!


வீரமாய் வில்லொடித்தே 

மைதிலியை மணந்தான்!


கர்வமிகு மதிஇழந்த 

பரசுராமன்

ஆணவந்தனை

அடக்கி இராமன் விஜயம் கொண்டான்!


அரும் செயல் புரிந்த

மகனை அரசன்


அகமகிழ்ந்து அணைத்துக் கொண்டான்!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன் 

கேளுங்கள் இனிதே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


அரசன் தசரதன் கார்முகில் ராமனுக்கு


மணிமகுடம் சூட்டவே

நாள் கணித்தானே!


அரசன் தசரதன் கார்முகில் ராமனுக்கு


மணிமகுடம் சூட்டவே

நாள் கணித்தானே!


மானிடர் அனைவரும் 

மகிழ்ச்சியில் நகரையே


மாவிலை தோரணத்தால்

விழா எடுத்தனரே!


குனியின் சொல் கேட்டு

உளம் மாறிய கைகேயி


அரசு உரிமை பரதனுக்களித்து நாட்டை ஆளவும்


வனத்தில் ராமன்

ஈரேழு ஆண்டுகள் வாழ


அரசனிடம் இருவரம்

கேட்டாள்!


அந்த வரங்கள் வழங்கிய மன்னன்!


களைப்புற்று விழுந்த 

பின்னர்


அண்ணலை அழைத்திட செய்தாள்!


அரசன் உனை வனம்

புகச் சொல்லி


தம்பி பரதனுக்கு 

அரசு ஈந்தார் என்றாள்!


சங்கடம் கொள்ளாமல்

சகேத ராமனும்


சரியென தாயே என

துதித்து சென்றான்!


வீர் கொண்டு கோபமுற்று

வில்லெடுத்த


தம்பி இலக்குவனை 

சாந்தமாக்கினான்!


ஜானகியும் ராமனும்

மரவுரி தரித்து செல்லவே


இலக்குவன் அவர் பின்

தொடர்வதைக்கண்டு


ஜானகியும் ராமனும்

மரவுரி தரித்து செல்லவே


இலக்குவன் அவர் பின்

தொடர்வதைக் கண்டு


கலங்கிய நகர மக்கள்

கண்ணீர் மல்கியே


ஆ..ஆ.ஆ...ஆஆ...


கலங்கிய நகர மக்கள்

கண்ணீர் மல்கியே


கண்மணி ராமன்

போகும் வழியை மறித்து நின்றனரே!



சோகத்தை நீக்கிய 

கருநீல வண்ணன்


கனிவுடன் அவர்களிடம்

விடையும் பெற்றானே


தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென


சிந்தையில் உணர்த்தியே

வனம் சென்றானே!


தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென

சிந்தையில் உணர்த்தியே வனம்

நாடி சென்றானே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன்! மகிழுங்கள் இனிதே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன் மகிழுங்கள் இனிதே!


கங்கை நதி அன்பன்!


குணத்தில் உயர்ந்த குகன்!


பண்பால் இராமபிரானின் தோழனாகினான்!


கங்கை நதி அன்பன்!


குணத்தில் உயர்ந்த குகன்!


பண்பால் ராமபிரானின் தோழனாகினான்!


பஞ்சவடி போகும் நேர்வழி காட்டினான்!


பஞ்சவடி போகும் நேர்வழி காட்டினான்!


சஞ்சலமில்லா ராமன்

அங்கு சென்று அடைந்தான்!


சஞ்சலமில்லா ராமன்

அங்கு சென்று அடைந்தான்!


தசமுகனின் தங்கை 

அரக்கியவள் சூர்ப்பனகை


தசரத மைந்தனிடம்

காதல் கொண்டாள்!


தசமுகனின் தங்கை

அரக்கியவள் சூர்ப்பனகை


தசரத மைந்தனிடம்

காதல் கொண்டாள்!


வெகுண்ட இளையோன்

சிறு அம்பால் அவளின்


மூக்கறுத்து அடித்து 

விரட்டி விட்டான்!


வெகுண்ட இளையோன்

சிறு அம்பால் அவளின்


மூக்கறுத்து அடித்து

விரட்டி விட்டான்!


தங்கையின் துர்போதனையால்

தசமுக இராவணன்


சீதா தேவியை சிறை பிடித்தான்!


தங்கையின் துர்போதனையால்

தசமுக இராவணன்


 சீதா தேவியை 

 சிறை பிடித்தான்!

மதியே கலங்கிட

கண்களே கடலாகி


இளையவனுடன் சீதையை தேடிச் சென்றான்!


ராமன் வாடிச் சென்றான்!


பாதையிலே ஜடாயுவிடம் விவரம் கேட்டறிந்தான்!


அஞ்சனை மைந்தன்

அனுமானின் தோழமைக் கொண்டான்!


கடலைத் தாண்டி இலங்கை அடைந்த அனுமான்


அன்னையை (அ)சோக வனக்கடலில் கண்டான்!


ராமதாசனாய் நான் வந்தேனடா! இராவணா என்றான்!


அனுமான் தீவிற்கே

 தீ வைத்து கிஷ்கிந்தை 

 அடைந்தான்!

ராம தாசனாய் நான் வந்தேனடா! இராவணா 

என்றான்!


அனுமான் தீவிற்கே 

தீ வைத்து கிஷ்கிந்தை

அடைந்தான்!


கண்டேன் கற்பிற்கு அணியே என்றே ராமனிடம் சொன்னான்!


கண்டேன் கற்பிற்கு அணியே என்றே ராமனிடம் சொன்னான்!


கடலில் பாலம் கட்டி 

அண்ணல் இலங்கையை அடைந்தான்!


வானர சேனையுடன்

அடைந்தான்!


விபிஷணின் சரணாகதியை ஏற்றான்!

தசமுகனை வென்றான்!


விபிஷணனின் சரணாகதியை ஏற்றான்!

தசமுகனை வென்றான்!


பூமி மாதா 

சீதையை தானே

தீ குளிக்க செய்தான்!


ஆஆஆஆஆஆஆஆ


தீக்குளிக்க செய்தான்!


கற்பின் அணங்கை

களிப்புடன் ஏற்று 

அயோத்தி நகர் அடைந்தான்!


கலங்கிய மக்கள் கவலையைத் தீர்த்த 

ராமன் மணி மகுடம்

ஏற்றான்!


மணிமகுடம் 

ஏற்றான்!

ஆ...ஆ...ஆ.....ஆ....ஆ


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!

உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன் மகிழுங்கள் இனிதே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


உங்கள் மனம் மகிழ

பாடுகிறேன் மகிழுங்கள் இனிதே!


உலகம் போற்றும் புனிதக் கதை ராமனின் கதையே!


T. Srinivasan