Wednesday, May 12, 2021

நம் அண்ணா சம்பத்துக்கு ஒரு மடல்

திருமலையில் ஒரு 

தெய்வம்!

எம் குடும்பத்திற்கு

திருமலையே தெய்வம்!


ஏழு திருமாளிகை திருமலை தாத்ததின்

இரண்டாம் வாரிசே!


நற்குணத்திற்கும்

நல் பாசத்திற்கும்

உனக்கு என்றும்

 முதல் பரிசே!


கடமையும் கண்ணியமும்

சகல சம்பத்துகளாய் திகழ்ந்தவனே!


உள்ளத்தில் உயர் சிந்தனை!


சமத்துவம் என்றும் உனது சித்தம்!


நல் குணமே  உன் 

நாடி துடிப்பு!


நீ பட்ட வேதனை பெரிது!


வெளி காட்டா உன் குணமே

அதினினும் பெரிது!


அதுவே உன் உயிர் நாடி!


அதற்கு தலை வணங்குகிறேன் கோடானுகோடி!


உரத்த குரலில் உண்மையை உரைக்கும் உத்தமனே!


மத்திய அரசு ஊழியர்களின்

மனதில் நிலை கொள் 

மாவீரனே!


அவர்களின் அன்பு

ரகுநாதனே!


பலருக்கும் நீ குருநாதனே!


 ஊழியர்களின்

வாழ்வில் ஒளி ஏற்றிய

ஒளி விளக்கே!


ஊழியர் சங்கத்தின்

கலங்காத மனம் கொண்ட

கலங்கரை விளக்கமே!


சக ஊழியர்களின்

கஷ்டத்தில் கை கொடுத்து கரை சேர்த்து

கண் அயராது பாடு பட்ட கனவானே!

என் அண்ணனே!


ஏழைக்கு இரக்கம் கொண்டு உதவி செய்பவனே!


அவர் துன்பங்களை துடைத்த தூயவனே!


அதனால் கருணைக்கு 

நீ ஒருவனே!

காருண்யத்திற்கும் நீ

ஒருவனே!


குழந்தைகளை நேசித்து

 விளையாடி 

குழந்தை போல் உள்ளம் கொண்டவனே!


தள்ளாத வயதிலும்

தனக்கென்று

 தனி வழியில்

நின்ற குணசீலனே!


நியாயம் நேர்மை வாக்குமாறாகப் பண்பாளனே!


வெள்ளை வேட்டி சட்டை அணிந்து

கள்ளமில்லா 

கறை படியாத

வெள்ளை மனிதனே!


கண் கலங்கும் நேரங்களில்

கலங்கா மனம் கொண்டு

கண் எதிரில் வாழ்ந்து

சென்ற அன்பு அண்ணனே!


என்றும் ஊரில் உனக்கு

பெயருண்டு!

உறவு உண்டு !

நல் உள்ளங்கள் உண்டு!


காலமகள் கரம் பிடித்ததால் 

திருமகள் மைதிலியின்

கரம் விட்டு

ரம்யமான மகள்

ரவி ராம்பிரபு என்ற குழந்தைகளை மறந்தனையோ!


அண்ணனே!

கடைத்தம்பியின்

வணக்கம் மட்டுமல்ல!

என் விண்ணப்பம் ஒன்று உண்டு!


சம்பத் அண்ணனே!


என்றும் எமக்கு அன்பு 

காட்டும் அண்ணனாய்

ஆறதலளித்திடும் அன்பாய் வர வேண்டும்!


அண்ணனே!

நீ பாசத்தின் பிறப்பிடம்!


பண்பில் குறையில்லா

நிறைகுடம்!


தர்க்த்தில் நீ முதலிடம்!


என் மனதில் நின்றாய்

என்றும் முதலிடம்!


அண்ணனே! வருக!


அந்த ரகுநாதனுக்கு ஒரு வில் பவர்!


இந்த ரகுநாதனுக்கு சொல்லும் செயலும் தான் வில் பவர்!


உன்  வில் பவரால் வைகுண்ட வசிக்க சென்றாயோ!


எம் சார்பாக வாதிட்டு 

எமக்கும் முன் பதிவிட

 அங்கு சென்றாயோ பாசத்தினால்!


கடைசி தம்பியின்

கண்ணீர் அஞ்சலி!


கரம் கூவித்து வணங்குகிறேன்

நன்றிப் பெருக்குடன்.

No comments:

Post a Comment