Wednesday, May 12, 2021

கோபிகா கீதம்

பாகவதம்

தசம ஸகந்தத்தில்

 31அத்தியாயம்


 கோபிகா கீதம்


19 ஸ்லோகங்கள்


இதை தான் நேற்று

(16.12.2020 ) 

வரிக்கு வரி சொல்லி விளக்கினார் உயர் திரு 

Brahamasri B. Sundarkumar .

இதை ஓரளவுக்கு தமிழில் எழுதியுள்ளேன் பிழைகள் இருப்பின் அடியேனை மன்னிக்கவும்.


       பாடல்கள்


1.பிருந்தாவனத்திலே கண்ணா!

திருவடி பதித்தாய்!


தீங்கின்றியே நாங்கள் 

மகிழ்ந்து வாழ்கிறோம்!


மாயக்கண்ணனே! உன்னை ஜீவனாகவே


நேயமுடன் தேடுகிறோம் 

கண்ணா ! விரைவில் 

ஒடி வா!


2.சரத் காலத்தில் கண்ணா!

 உன் தாமரை 

கண்களால் 


மயக்கி நின்றாயே

கண்ணா ! மலர்பதம் பணிவோம்!



உன் பால் லீலைகள் 

கண்ணா பலதும் அறிவோமே!



பாடி வாடுகிறோம் கண்ணா!

ஒடி வருவாயே!


3.நஞ்சு யமுனையில்

கண்ணா!

 நாகத்தை

விரட்டினாய்!


அகாசுரனை அழித்தாய்!

கண்ணா!

எமக்கு அபயமளித்தாய்!


அடைமழையினில்

கண்ணா!

குன்றமேந்தினாய்!


கஞ்ச கம்சனை

அழித்த கண்ணா!

தந்தை காத்தாய்!


4.நந்தன் மைந்தனே 

கண்ணா!

யசோதை பாலனே!


யாதவ குலத்திலே கண்ணா !நீ அவதரித்தாயே!


பூலோகம் காக்கவே 

கண்ணா!

ப்ரும்மன் வேண்டினார்!


பூமா தேவியே !கண்ணா !

மன மகிழ்ந்தாளே!


5.பயமடைந்த எங்களின்

கண்ணா ! துன்பம் போக்குவாய்!


நயந்தருள்வது கண்ணா! உன் நளினக்கரங்களே!


அயர்ந்த எம் சிரத்தில்

கண்ணா!

உன் மலர்பதம் வைத்தாய்!


ஜகமனைத்திலும் கண்ணா!

 உறைபவன் திருமகள் மணாளனே!


6.பாடும் எங்களின்

கண்ணா

துன்பம் போக்குவாய்!


தேடும் எம் கர்வம் 

கண்ணா!

கள்ளச் சிரிப்பினில்

அழித்தாய்!


நாங்கள் தாசிகள்

கண்ணா!

ஏற்றுக் கொள்ளுவாயே!


வாடி வந்துள்ளோம்!

கண்ணா!

ஒடி வருவாயே கமல முகத்தோனே!


7.பாதம் பணிபவர்

கண்ணா!

பாவம் கரையுமே!


ஆநிரை மேய்த்த கண்ணா! நீ

ஆதி புருஷனே!


விட நாகத்தின் மேல்

கண்ணா !களி நடம் 

புரிந்தாய்!


மாது எங்களின் கண்ணா!

மனம் கவர்ந்தவன் நீயே!


8.மதுர கீதமே !கண்ணா! 

உன் சொல்லும் செயலுமே!


அனாதன் எங்களை

கண்ணா!

ஆதரித்து அமிர்தம் தருவாயே!


ஒடி வந்திட்டோம் கண்ணா 

தேடி அலைகிறோம்!


வாடியே போய் விட்டோம் கண்ணா

காட்சியளிப்பாயே!



9.உன் லீலை அறிந்தாலே கண்ணா!

தாபம் தீருமே


சகடம் உதைத்தை

நினைக்கவே

கண்ணா!

சங்கடம் விலகுமே!


த்ருணாவ்ருத்தனை

அழித்தாயே

கண்ணா!

 மங்களும் பெருகவே


உன் குணங்கள் புகழ்பவர் கண்ணா!

என்றும்

உயர்ந்தவர் அன்றோ!


10.கள்ள சிரிப்பும் கண்ணா !

கனிந்த 

வார்த்தையும்


நர்த்தன லீலையும்

கண்ணா !ரகசிய பேச்சும்


கறுத்த மேனியே 

கண்ணா !

திளைப்பவருக்கு

நித்திய சுகம் பெறுவர்

கண்ணா !

சித்தம் தெளிந்தே!


11.பிருந்தாவனத்திலே

கண்ணா !ஆநிரை

மேய்த்தவனே!


உன் பாத கமலமே

கண்ணா !

கல் பட்டு நோகுமே!


வேதனை அடைவோமே

கண்ணா!உன் 

நிலை அறிந்து


பதித்த பாவனா கண்ணா! எம்மை

ஏமாற்றலாகுமே!


12.சந்தி வேளையில்

கண்ணா !விரக தாபமே


வந்திட்ட போதிலே

கண்ணா!வாட்டி வதைக்காதே!


கோதுளி தூசியே

கண்ணா உன் அழகு மேனியிலே!


நந்த குமார மன்மதா

கண்ணா!

உன் வசமானோம்!


13.துக்கம் தீர்க்குமே

கண்ணா!

உன் மலரடி சரணம்!


இஷ்டம் கைகூடுமே 

கண்ணா!

உன்னடி பணிந்தால்!


கமல முகத்தோனே

கண்ணா!

காதல் கொள்ளுவாய்!


கமலக் கண்களால்

கண்ணா !

கடாஷித்தருள்வாயே!


14.துன்பம் போகுமே

கண்ணா!

போகம் செழிக்குமே!


இன்பம் பெருகுமே

கண்ணா !உன்

அதர அமிர்தமே!


மோகம் தீருமே 

கண்ணா !

உலகின் ஆசைகள்


ஓடிப் போகுமே

கண்ணா !

உன் வேணுகானத்தால்


15.சிறு காலை வேளையில் 

கண்ணா!

கானகம் சென்றதால்


காண முடியாமலே

கண்ணா!

கலங்கிவிட்டோமே!


சுருண்ட கேசமும்

கண்ணா!

மின்னும் வதனமும்


நீ வந்த வேளையே

கண்ணா!

அமிர்த யோகமே!


16.ரகசியமாய் கண்ணா!

நீ செய்த சத்தியம்


மனதில் என்றுமே

கண்ணா!உன்

அழகிய முகமே!


பரம புருஷனே கண்ணா! உன்

அருள் பார்வையால்

மனம் மயங்குதே!


மார்பு அமர் 

லக்ஷ்மி காந்தனே

கண்ணா !

கண்டு மயங்கினோம்!


17.கோகுலத்திலே கண்ணா !நீ வந்ததால்

குவலயம் மகிழ்ந்ததே

குறையில்லாதவனே!


குதுகுலமே கண்ணா!

 நீ எங்கள்  அருமருந்தல்லவா!


யதுகுலத்திற்க்கே

கண்ணா!

என்றும் மங்களமே!


19.நளின பாத கமலம்

மிக பயத்துடன் 

வரதா! எங்கள் மார்பினில் வைப்போம் மெது மெதுவாகவே


காட்டில் அலைந்து கல் பட்டால் நோகுமே நின்

திருமலர் பாதம்


கண்டு கலங்குவோம்!

மனமே உருகுவோம்!


   வேண்டுதல்(வேறு)


ராதையின் பக்தி போல்

கண்ணா!

எனக்கு கிடையாது!


யசோதை வாஞ்சையும்

கண்ணா

என்னிடமில்லை!


பூதனைப் போல கண்ணா 

வேடம் புனையவில்லை!


அசுர குணமுடன் 

கண்ணா !

அஹங்காரமாய்

திரிந்தேன்!


கடமை செய்து 

கண்ணா!

பலன் எதிர்பார்த்த 

சுய நலம் கொண்டேனே!


கர்வம் தலைக்கேறி கண்ணா!

பகட்டாய் வாழ்ந்தவன் நானே!


விடா முயற்சியால் கண்ணா!

வேண்டி கேட்கிறேன்!


பழவினையும் 

மேல் வினையும்

கண்ணா !

கரைந்து விடுவாயே!


உன் திருவடியிலே

கண்ணா !

என் சிரமே

வைத்திட்டேன்!


விதி மாற்றிட

கண்ணா! விரைந்தருள்வாயே!

No comments:

Post a Comment