Wednesday, May 12, 2021

சின்னஞ் சிறு கிளியே! கண்ணம்மா ! பாடல் மெட்டு



கரு நீலக் குயிலே!

கண்ணப்பா!

கருணையின் அருள் வடிவே!


கரு நீலக் குயிலே!

கண்ணப்பா!


கருணையின் அருள் வடிவே!


எந்தன் வினைக் களைந்தே


வாழ்வில் ஒளி ஏற்றி 

மிளிர வைத்தாய்!


எந்தன் வினைக் களைந்தே

வாழ்வில் ஒளி ஏற்றி

மிளிர வைத்தாய்!


கரு நீலக் குயிலே!

கண்ணப்பா!

கருணையின் அருள் வடிவே!


ஊதும் பொழுதினிலே!

கண்ணப்பா!

குழல் ஊதும் பொழுதினிலே கண்ணப்பா!

ஊனே உருகுதப்பா!

ஊதும் பொழுதினிலே கண்ணப்பா

என் ஊனே உருகுதப்பா!

நாடி நரம்பெல்லாம் கண்ணப்பா!

உன் திருநாமமே

ஜொலிக்குதப்பா!


கோகுலம் கன்னியரெல்லாம்

கோபாலா! 

உந்தன் லீலையில் மயங்கினரே!


கோகுலம் கன்னியரெல்லாம்

கோபாலா!

உந்தன் லீலையில் மயங்கினரே!


குதுகுலத்திற்கு ஒரு 

எல்லையில்லையே!

யதுகுலம் ஏற்றம் அடைந்ததப்பா!


குதுகலத்திற்கு ஒரு எல்லையில்லையே!

யதுகுலம் ஏற்றம் அடைந்ததப்பா!


கழலடியில் கிடந்ததனால் 

களைப்பே தெரியவில்லை!

கழலடியில் கிடந்ததனால்

களைப்பே தெரியவில்லை!


உன் அருள் பெற்றிடினோ

கண்ணப்பா!

என்றும் 

நிறைவுதானப்பா!


உன் அருள் பெற்றினிடினோ

கண்ணப்பா!

என்றும் நிறைவுதானப்பா!


உன் கண்கள் குளமானால்

கண்ணப்பா!

என்  மனம் சிதறுதப்பா!

உன் கண்கள் குளமானால்

என் மனம் சிதறுதப்பா!


என் பாட்டின் ஸ்வரமன்றோ!

கண்ணப்பா!

என் ஜீவன் உனக்கன்றோ!


என் பாட்டின் ஸ்வரமன்றோ

கண்ணப்பா!

என் ஜீவன் உனக்கன்றோ!

என் ஜீவன் உனக்கன்றோ!


T. Srinivasan

No comments:

Post a Comment